கதாநாயகியாக அறிமுகமான பிரேமம் திரைப்படத்திலேயே அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த நடிகை சாய் பல்லவி, தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். அந்தவகையில் சாய்பல்லவி நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு ரிலீசான திரைப்படம் கார்கி

சக்தி பிலிம் ஃபேக்டரி வழங்க தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் ரிலீசான கார்கி திரைப்படத்தை தமிழகத்தில் சூர்யா-ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்டது. கார்கி திரைப்படத்தில் சாய்பல்லவி உடன் இணைந்து ஐஸ்வர்யா லெக்ஷ்மி மற்றும் காளி வெங்கட் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ப்ளாக்கி ஜெனி & மை லெஃப்ட் ஃபூட் ப்ரொடக்ஸன்ஸ் ரவிச்சந்திரன் ராமச்சந்திரன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, தாமஸ் ஜார்ஜ் மற்றும் கௌதம் ராமச்சந்திரன் இணைந்து தயாரிக்க, இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவான கார்கி படத்திற்கு ஷ்ரயான்தி  மற்றும் பிரேம் கிருஷ்ணா அக்கட்டு ஒளிப்பதிவில், கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசான கார்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கார்கி திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்தக் காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.