தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். பல வெற்றி படங்களை இவர் நடித்தாலும், ராஜா மௌலி இயக்கிய பாகுபலி திரைப்படம் புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் வந்தவுடன் உலகளவில் பிரபலமானார். கடந்த ஆண்டு பிரபாஸ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி நடை போட்ட திரைப்படம் சாஹோ. இயக்குனர் சுஜித் இந்த படத்தை இயக்கியிருந்தார். 

Saaho Director Sujeeth Gets Engaged To Pravalika Saaho Director Sujeeth Gets Engaged To Pravalika

இந்நிலையில் இயக்குனர் சுஜீத் திருமண பந்தத்திற்குள் நுழைய உள்ளார் என்ற சுவையூட்டும் செய்தி தெரியவந்தது. ப்ரவாலிகா எனும் பல் மருத்துவரை திருமணம் செய்யவுள்ளார. குறைந்த நபர்கள் கொண்டு இவர்களது நிச்சயதார்த்தம் இன்று நடந்து முடிந்தது. 

Saaho Director Sujeeth Gets Engaged To Pravalika

கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட இந்த லாக்டவுன் சூழலில் பலர் தங்கள் வீட்டிலேயே எளிமையான முறையில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இயக்குனர் சுஜீத் மற்றும் ப்ரவாலிகாவிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது நம் கலாட்டா.