பாகுபலி படத்தின் மூலம் உலக சினிமா அளவுக்கு இந்திய படங்களும் இருக்கும் என்று சவால் விட்டவர் ராஜமௌலி.பாகுபலி படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் RRR.

RRR Team Says No Surprise on NTR Birthday

RRR படத்தில் ராம்சரண் மற்றும் Jr.NTR இருவரும் கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.ஹிந்தியில் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன்,ஆல்யா பட்,சமுத்திரக்கனி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

RRR Team Says No Surprise on NTR Birthday

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.ராமச்சரனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ப்ரோமோ வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டனர்.இதனை தொடர்ந்து படத்தின் மாற்றொரு நாயகனான Jr NTR பிறந்தநாள் மே 20 அன்று வருகிறது.இதற்கும் ஒரு ப்ரோமோ டீஸர் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

RRR Team Says No Surprise on NTR Birthday

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு நீண்டுகொண்டே போவதால் தங்களால் எந்த வேலையும் செய்யமுடியவில்லை என்றும் அதனால் Jr NTR பிறந்தநாள் அன்று விடியோவோ பர்ஸ்டலுக்கோ வெளிவராது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.வெறும் ப்ரோமோவாக இதனை வெளியிட விரும்பவில்லை எனவே ரசிகர்களின் காத்திருப்புக்கு பதில்சொல்லும் வண்ணம் இந்த டீஸர் இருக்கும் என்றும் அவர்கள் ரசிகர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.