பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ரெடி ஆகி ரிலீசுக்கு காத்துக்கொண்டிருக்கும் படம் RRR.தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் NTR இருவரும் ஹீரோக்களாக நடித்துள்ளனர்.இந்த படம் பன்மொழிகளில் வரும் ஜனவரி 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.இந்த படத்தின் தமிழகத்தில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் வெளியிடுகின்றனர்.இந்த படத்தின் முக்கிய நட்சத்திரங்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்,இவர்களுடன் சிவகார்த்திகேயன்,உதயநிதி ஸ்டாலின்,கலைப்புலி எஸ் தாணு,ஆர் பி Chowdry உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

பெரிய எதிர்பார்ப்புக்கிடையே இந்த படம் வெளியாகவுள்ளது.இந்த விழாவில் நடந்த பல நிகழ்வுகள் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் அடித்து வருகின்றன.அதில் முக்கியமான ஒன்று RRR பட நாயகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் சிவகார்த்திகேயனின் சமீபத்திய ஹிட் பாடலான ஜலபுல ஜங்கு பாடல் வரிகளை பாடியுள்ளனர்.இந்த தருணம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயனின் இந்த சூப்பர்ஹிட் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்தது.இந்த பாடல் இடம்பெற்ற டான் படத்தையும் லைகா நிறுவனம் தயாரித்துள்ளனர்.டான் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.