தெலுங்கு சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் இருபெரும் முன்னணி நாயகர்களாக திகழ்ந்து வருபவர்கள் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் மற்றும் NTR மகன் Jr.NTR.இருவருக்கும் இருபெரும் ரசிகர் பட்டாளங்கள் உள்ளன.இவர்கள் இருவரும் இணைந்து தற்போது RRR படத்தில் நடித்து வருகின்றனர்.மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.

விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை ராஜமௌலி இயக்கி வருகிறார்.பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து இந்த படத்தை தொடங்கினார் ராஜமௌலி.இந்த படமும் பாகுபலி படத்தினை போல முக்கிய இந்தியா மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலியா பட்,அஜய் தேவ்கன்,சமுத்திரக்கனி,ஷ்ரேயா என்று பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது.

இந்த படம் அக்டோபர் 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் தமிழ்நாடு தமிழ்நாடு திரையரங்க உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளனர்.இரண்டு பாடல்களை தவிர படத்தின் ஷூட்டிங் மொத்தமாக முடிந்துள்ளது என்றும் , படத்தின் டப்பிங்கை இரண்டு மொழிகளில் ஹீரோக்கள் முடித்துள்ளனர் என்றும் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்த படத்தின் மேக்கிங் வீடியோ மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு உக்ரைனில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது கடந்த சில நாட்காளாக நடந்து வந்த இந்த படப்பிடிப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது என்று வீடியோ வெளியிட்டுள்ளனர்.

View this post on Instagram

A post shared by RRR Movie (@rrrmovie)