தெலுங்கு சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் இருபெரும் முன்னணி நாயகர்களாக திகழ்ந்து வருபவர்கள் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் மற்றும் NTR மகன் Jr.NTR.இருவருக்கும் இருபெரும் ரசிகர் பட்டாளங்கள் உள்ளன.இவர்கள் இருவரும் இணைந்து தற்போது RRR படத்தில் நடித்து வருகின்றனர்.மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை ராஜமௌலி இயக்கியுள்ளார்.இந்த படமும் பாகுபலி படத்தினை போல முக்கிய இந்தியா மொழிகளில் வெளியாகவுள்ளது.ஆலியா பட்,அஜய் தேவ்கன்,சமுத்திரக்கனி,ஷ்ரேயா என்று பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது.

இந்த படத்தின் தமிழ்நாடு தமிழ்நாடு திரையரங்க உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளனர்.இந்த படத்தின் மேக்கிங் வீடியோ மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

கொரோனா காரணாமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.இந்த படம் ஜனவரி 7ஆம் தேதி 2022ல் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.தற்போது இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்றும்படி உள்ள இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.