தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் 2015-ல் வெளியானது மாரி திரைப்படம்.காஜல் அகர்வால் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.ரோபோ ஷங்கர்,விஜய் யேசுதாஸ்,மைம் கோபி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது.

இரண்டாம் பாகத்தில் மலையாள நடிகர் டோவினோ தாமஸ் முக்கிய வில்லனாக நடித்தார்.சாய் பல்லவி இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.கிருஷ்ணா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.2018 இறுதியில் மாரி 2 ரிலீசானது.முதல் பாகம் அளவிற்கு இந்த படம் பெரிய வரவேற்பை [பெறவில்லை என்றாலும் சுமாரான வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருந்தது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் பாடல்கள் சூப்பர்ஹிட் அடித்திருந்தன.குறிப்பாக இந்த படத்தின் ரௌடி பேபி பாடல் அனைவரையும் கவர்ந்திருந்தது.வெளியான சில நாட்களிலேயே இந்த பாடல் ரசிகர்களிடையே வைரல் ஹிட் ஆனது.பாடல் ரிலீஸ் முதல் வீடியோ ரிலீஸ் வரை எல்லாமே சாதனை தான்.யுவனின் துள்ளலான இசையில் உருவான இந்த பாடல் யூடூப்பில் வேற லெவல் ரீச்சை பெற்றது.

தனுஷின் catchy-ஆன வரிகளும் பாடலுக்கு பக்க பலமாக அமைந்தது.ஆடியோ ரிலீஸின் போதே tiktok-ல் பலரால் பதிவு செய்யப்பட்ட பாடல் என்ற சாதனையையும் படைத்தது.அடுத்ததாக youtube-ல் வீடியோ வந்தவுடன் பல சாதனைகளை படைத்தது.பிரபுதேவாவின் அசத்தலான steps-க்கு தனுஷ்,சாய் பல்லவி இருவரும் அசத்தலாக நடனமாட views எகிறியது.தமிழில் அதிவேகமாக 100 மில்லியன் ,150 மில்லியன் என சாதனைகளை அடுக்கியது இந்த பாடல்.

அடுத்து 500 மில்லியன் 800 மில்லியன் என்று தமிழின் முதல் பாடல் என்ற பெருமையை பெற்று வந்த இந்த பாடல்.இப்போது மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளது.900 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது இந்த பாடல்.இதன் மூலம் இந்திய வீடியோக்களில் அதிகம் பார்க்கப்பட்ட ஐந்தாவது பாடல் என்ற பெருமையையும் இந்த பாடல் படைத்துள்ளது.விரைவில் பில்லியன் பார்வையாளர்களை பெற்ற முதல் தமிழ் பாடல் என்ற சாதனையை படைக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.