விஜய் டிவியில் ஒளிபரப்பான செம ஹிட் தொடர்களில் ஒன்று சரவணன் மீனாட்சி.இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் ரம்யா ஷங்கர்.இந்த தொடரில் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார் ரம்யா.

இந்த தொடருக்கு கிடைத்த பெரிய வரவேற்பை அடுத்து ஆண்டாள் அழகர் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தினார் ரம்யா.இந்த தொடரும் பெரிய வரவேற்பை பெற ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல் நடிகையாக மாறினார் ரம்யா ஷங்கர்.

இதனை தொடர்ந்து பொன்மகள் வந்தால்,அழகு,மாப்பிள்ளை,உறவுகள் சங்கமம்,என் இனிய தோழியே உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் தொடர்களில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமான நடிகையாக மாறினார் ரம்யா.மேலும் தலைமுறைகள்,மாசு என்கிற மாசிலாமணி,நவீன சரஸ்வதி சபதம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் ரம்யா.

சன் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான ரோஜா மற்றும் விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி தொடங்கிய வேலம்மாள் உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருகிறார் ரம்யா.தற்போது இவரது தாயார் சில தினங்களுக்கு முன் கொரோனா காரணமாக இறந்துவிட்டார் என்ற தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.