சன் டிவியில் TRP-யை அள்ளிக்குவித்து வரும் வரும் பிரபல தொடர்களில் ஒன்று ரோஜா.ப்ரியங்கா நல்காரி இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.சிபு சூரியன் இந்த தொடரின் நாயகனாக நடித்து வருகிறார்.வடிவுக்கரசி,ஷாமிலி சுகுமார்,பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த தொடரில் முன்னணி வேடங்களில் நடித்து வரும் ப்ரியங்கா மற்றும் சிபு சூரியன் இருவருக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து இந்த தொடரின் ஷூட்டிங் கடந்த 8ஆம் தேதி தொடங்கியது.விறுவிறுப்பாக இந்த தொடரின் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் இந்த தொடரின் புதிய எபிசோடுகள் ஜூலை 27ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான ப்ரோமோக்கள் சில நாட்கள் முன் வெளியானது.இதனை தொடர்ந்து தற்போது புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த தொடரில் யாஷிகா ஆனந்த் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்ற தகவல்கள் சில வாரங்களாக சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இந்நிலையில் இதனை உறுதி செய்யும் வகையில் நேற்று யாஷிகா ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.இதனை தொடர்ந்து இவர் இந்த சீரியலின் ஹீரோ ஹீரோயினுடன் வரும் ப்ரோமோக்கள் சிலவற்றை தற்போது சீரியல் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோ வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.இணையத்தில் வைரலாகி வரும் இந்த ப்ரோமோ வீடியோக்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்