சன் டிவியில் TRP-யை அள்ளிக்குவித்து வரும் வரும் பிரபல தொடர்களில் ஒன்று ரோஜா.ப்ரியங்கா நல்காரி இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.சிபு சூரியன் இந்த தொடரின் நாயகனாக நடித்து வருகிறார்.வடிவுக்கரசி,ஷாமிலி சுகுமார்,பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த தொடரில் முன்னணி வேடங்களில் நடித்து வரும் ப்ரியங்கா மற்றும் சிபு சூரியன் இருவருக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து இந்த தொடரின் ஷூட்டிங் கடந்த 8ஆம் தேதி தொடங்கியது.விறுவிறுப்பாக இந்த தொடரின் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் இந்த தொடரின் புதிய எபிசோடுகள் ஜூலை 27ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தன.யாஷிகா ஆனந்த் இந்த தொடரில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.இந்த எபிசோடுகளும் நல்ல வரவேற்பை பெற்றன.

ரசிகர்களின் ஆதரவோடு 600 எபிசோடுகளை கடந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளது.தொடரின் நாயகி பிரியங்கா நல்காரி தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் மூலம் ரசிகர்களுக்கு அவ்வ்வப்போது அப்டேட்களை வழங்கி வருவார்.தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கார் வாங்கியது குறித்து பதிவிட்டுள்ளார் பிரியங்கா மேலும் காரை தனது புதிய பாய்ஃபிரண்ட் என ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துவைத்துள்ளார்.இது செம வைரலாக பரவி வருகிறது.

View this post on Instagram

MY BOYFRIEND 😆🚙

A post shared by PRIYANKA NALKARI (@nalkarpriyanka) on