சன் டிவியில் TRP-யை அள்ளிக்குவித்து வரும் வரும் பிரபல தொடர்களில் ஒன்று ரோஜா.ப்ரியங்கா நல்காரி இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.சிபு சூரியன் இந்த தொடரின் நாயகனாக நடித்து வருகிறார்.வடிவுக்கரசி,அக்ஷயா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த தொடரில் முன்னணி வேடங்களில் நடித்து வரும் ப்ரியங்கா மற்றும் சிபு சூரியன் இருவருக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.ரசிகர்களின் ஆதரவோடு அமோக வரவேற்பை பெற்றுள்ளது.பல சுவாரசிய திருப்பு முனைகளுடன் இந்த தொடர் விறுவிறுப்பாக சென்று வருகிறது.

இந்த தொடரில் முக்கிய வில்லியாக நடித்து அசத்தி வரும் ஷாமிலி சுகுமார் கர்பமாக இருப்பதால் இந்த தொடரில் இருந்து விலகினார்.இவருக்கு பதிலாக சன் மியூஸிக்கில் பிரபல தொகுப்பாளியாக அசத்திய அக்ஷயா நடித்து அசத்தி வருகிறார்.

பல திருப்பங்களுடன் சென்று வரும் இந்த தொடர் தற்போது 1000 எபிசோடுகளை கடந்து பெரிய சாதனையை படைத்துள்ளது.1000 எபிசோடுகளை கடந்த சில தமிழ் தொடர்களில் ஒன்றாக ரோஜா சீரியல் இணைந்துள்ளது.இதற்கு ரசிகர்கள் ரோஜா சீரியல் குழுவிற்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.