விஜய் டிவியில் ஒளிபரப்பான செம ஹிட் தொடர்களில் ஒன்று சரவணன் மீனாட்சி.இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் ரம்யா ஷங்கர்.இந்த தொடரில் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார் ரம்யா.

இந்த தொடருக்கு கிடைத்த பெரிய வரவேற்பை அடுத்து ஆண்டாள் அழகர் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தினார் ரம்யா.இந்த தொடரும் பெரிய வரவேற்பை பெற ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல் நடிகையாக மாறினார் ரம்யா ஷங்கர்.

இதனை தொடர்ந்து பொன்மகள் வந்தால்,அழகு,மாப்பிள்ளை,உறவுகள் சங்கமம்,என் இனிய தோழியே உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் தொடர்களில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமான நடிகையாக மாறினார் ரம்யா.மேலும் தலைமுறைகள்,மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் ரம்யா.

சன் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான ரோஜா மற்றும் விஜய் டிவியில் வேலம்மாள் தொடர்களில் நடித்து வந்தார் ரம்யா.தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் விரைவில் அதிலிருந்து மீண்டு வருவதாகவும் ரசிகர்களிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.