ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா நல்காரிக்கு திடீர் திருமணம்... சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ!

ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா நல்காரிக்கு திடீர் திருமணம்,roja serial actress priyanka nalkar got married at malaysian murugan temple | Galatta

தமிழ் நாட்டில் பிரபலமான சின்னத்திரை நாயகிகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை பிரியங்கா நல்காரி. தெலுங்கில் அண்டரி பந்துவய்யா படத்தின் மூலம் நடிகையாக களமிறங்கிய நடிகை பிரியங்கா நல்காரி தொடர்ந்து சம்திங் சம்திங், தீயா வேலை செய்யணும் குமாரு, வெல்கம் டு அமெரிக்கா, கிக் 2, ஹைப்பர், காஞ்சனா 3 உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்த நடிகை பிரியங்கா நல்காரி பல முன்னணி சீரியல்களில் நாயக்கியாக அசத்தி வருகிறார்.

அந்த வகையில் ஆரம்பத்தில் தெலுங்கில் மேகமலா, மங்கம்மா காரி மணவரலு மற்றும் ஸ்ரவன சமீரளு உள்ளிட்ட மெகா தொடர்களில் நடித்த நடிகை பிரியங்கா நல்காரி சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலுக்கு பிறகு மிகுந்த பிரபலம் அடைந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த ரோஜா சீரியலில் ரோஜா கதாபாத்திரத்தில் நாயகியாக மக்களின் மனம் கவர்ந்த நடிகை பிரியங்கா அல்காரி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் எனும் புதிய மெகா தொடரில் சீதா எனும் கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதனிடையே தற்போது நடிகை பிரியங்கா நல்காரிக்கு திடீரென திருமணம் நடைபெற்று உள்ளது. மலேசியா முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை நடிகை பிரியங்கா நல்காரி வெளியிட்டுள்ளார். முன்னதாக ராகுல் வர்மா எனும் தொழிலதிபரோடு பிரியங்கா நல்காரிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று திருமணம் நடைபெறாமல் தடைபட்டதாக செய்திகள் பரவி வரும் நிலையில், பல தடைகளைத் தாண்டி இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர் என தெரிகிறது. 

மெகா சீரியல்கள் என்றாலே சன் டிவி தான் என சொல்லும் அளவிற்கு ரசிகர்களின் இதயங்களை மெகா சீரியல்களால் கொள்ளையடித்த சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றான ரோஜா சீரியலில் நடித்து வந்த நடிகை பிரியங்கா நல்காரி கடந்த ( 2022) ஆண்டில் ரோஜா சீரியல் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது ஜீ தமிழில் சமீபத்தில் (2023) தொடங்கப்பட்ட சீதா ராமன் மெகா தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரோஜா சீரியல் மூலமாக மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்த நடிகை பிரியங்கா நல்காரியின் இந்த திடீர் திருமணத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 23 - 3 - 2023 என தேதியை குறிப்பிட்டு வாழ்வில் நினைவில் கொள்ள வேண்டிய நாள் என கோவிலில் ஏற்றப்பட்ட தீபத்தின் புகைப்படத்தை வெளியிட்டு பதிவிட்டிருந்த நடிகை பிரியங்கா நல்காரி தொடர்ந்து மலேசியா முருகன் கோவிலில் ராகுல் வர்மாவோடு திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். சோசியல் மீடியாக்களில் ட்ரண்டாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Priyanka Nalkari Official (@nalkarpriyanka)

காதல் கணவரின் இயக்கத்தில் நடித்த பிரபல சீரியல் நடிகை... ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் அசத்தலான குறும்படம் இதோ!
சினிமா

காதல் கணவரின் இயக்கத்தில் நடித்த பிரபல சீரியல் நடிகை... ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் அசத்தலான குறும்படம் இதோ!

'கார்த்திகை தீபம் சீரியலில் வில்லியாக என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா?'- விவரம் உள்ளே
சினிமா

'கார்த்திகை தீபம் சீரியலில் வில்லியாக என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா?'- விவரம் உள்ளே

தங்கலான் படத்தில் பிரிட்டிஷ்காரர்களை பா.ரஞ்சித் சித்தரிக்கும் விதம்... மனம் திறந்த ஹாலிவுட் நடிகர் டானியல் கால்டகிரோன்! சிறப்பு பேட்டி இதோ
சினிமா

தங்கலான் படத்தில் பிரிட்டிஷ்காரர்களை பா.ரஞ்சித் சித்தரிக்கும் விதம்... மனம் திறந்த ஹாலிவுட் நடிகர் டானியல் கால்டகிரோன்! சிறப்பு பேட்டி இதோ