தமிழ் திரையுலகில், தனுஷ், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து காமெடி காட்சிகளில் நடித்து அசத்தி வருபவர் நடிகர் ரோபோ ஷங்கர். பிரபல தனியார் தொலைக்காட்சியில், ஒரு ஸ்டண்ட் அப் காமெடியனாக சின்னத்திரையில் தன்னுடைய காமெடி பயணத்தை துவங்கி, சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து, தற்போது தன்னுடைய திறமையால் முன்னணி காமெடியனாக வளர்ந்துள்ளார். 

இவரை தொடர்ந்து இவருடைய மனைவி பிரியங்கா, நடன கலைஞர் என்பதை தாண்டி  ஸ்டண்ட் அப் காமெடியில் துவங்கி, தற்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.

மேலும், ரோபோ ஷங்கரின் மகளும் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மாவாக கால் பந்து களத்தில் இறங்கி அடித்தார். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. இப்படி ஒட்டுமொத்த குடும்பமே, திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்கள். 

இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி போல் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரோபோ ஷங்கர். அதில் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி நடித்த பவானி பாத்திரத்திற்கு பொளக்கட்டும் பற பற எனும் பாடல் இடம்பெற்றிருக்கும். இந்த பாடலுக்கு விஜய் சேதுபதி ஸ்டைலில் ரோபோ ஷங்கர் நடனமாடியது ரசிகர்களை ஈர்த்து வருகிறது. 

சமீபத்தில் வெளியான சக்ரா படத்தில் ரோபோ ஷங்கரின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. அறிமுக இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஷால் நாயகனாக நடித்திருந்தார். கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். டிஜிட்டல் உலகில் நடக்கும் திருட்டு குறித்த கதையாக அமைந்தது. 

சமீபத்தில் வெளியான குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி படத்திலும் நடித்திருந்தார் ரோபோ ஷங்கர். கெளதம் மேனன் இயக்கிய எதிர்பாரா முத்தம் படத்தில் நடித்திருந்தார். கெளதம் மேனன் உடன் ரோபோ ஷங்கரின் காமெடி காட்சிகள் ரசிகர்களை பெரிதளவில் ஈர்த்தது.