தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சந்தானம். சமீபத்தில் வெளியான ஏ1 திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடியது. தற்போது இவரது நடிப்பில் டகால்டி மற்றும் டிக்கிலோனா போன்ற படங்கள் வெளியாகவுள்ளது. 

santhanam santhanam

இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வந்த படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் தெரியவந்தது. போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முழு மூச்சில் போய் கொண்டிருப்பதாக இயக்குனர் பதிவு செய்துள்ளார். விரைவில் படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

rkannan

அதர்வா மற்றும் அனுபமா வைத்தும் படத்தை இயக்கி வருகிறார் ஆர்.கண்ணன். இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு அசர்பைஜானில் நடைபெற்று வந்தது.