எப்போது நடிப்பதை நிறுத்துவீங்க... மகனுடன் நேருக்கு நேர் பதிலளிக்கும் RJபாலாஜி - ரன் பேபி ரன் பட கலகலப்பான ஸ்பெஷல் பேட்டி!

மகனுடைய கேள்விகளுக்கு நேருக்கு நேர் பதில் அளிக்கும் RJபாலாஜி,rj balaji special interview with his son for run baby run movie | Galatta

தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராகவும் முன்னணி ரேடியோ வர்ணனையாளராகவும் ரசிகர்களுடைய மிகப் பிரபலமடைந்த RJபாலாஜி தற்போது கதாநாயகனாக தரமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்தது நடித்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக RJ.பாலாஜி நடிப்பில் சிங்கப்பூர் சலூன் திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது.

முன்னதாக நடிகர் RJபாலாஜியின் திரைபயணத்தில் இதுவரை இல்லாத முற்றிலும் மாறுபட்ட விறுவிறுப்பான த்ரில்லர் திரைப்படமாக வெளிவரும்  திரைப்படம் ரன் பேபி ரன். RJபாலாஜி உடன் இணைந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரன் பேபி ரன் திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், ஸ்மிருதி வெங்கட் & விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பிரபல மலையாள இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ரன் பேபி ரன் திரைப்படத்திற்கு யுவா ஒளிப்பதிவில், மதன் கணேஷ் படத்தொகுப்பு செய்ய, சாம்.CS இசையமைத்துள்ளார். ரன் பேபி ரன் திரைப்படம் வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

இந்நிலையில் ரன் பேபி ரன் திரைப்படத்தின் சிறப்பு பேட்டியாக தன் மகனின் கேள்விகளுக்கு நேருக்கு நேர் பதிலளித்தார் RJ.பாலாஜி, அந்த வகையில் தனது முதல் கேள்வியாக அவரது மகன் மகந்த் கேட்ட கேள்வி, "எப்போது நடிப்பதை நிறுத்தப் போகிறீர்கள்?" என்பதுதான்.

இதற்கு பதிலளித்த ஆகிய RJ.பாலாஜி, “ஏம்பா நான் நிறுத்தணுமா? இப்போது தானே ஆரம்பித்து இருக்கிறேன்… கொஞ்சம் வருஷமாக” என பதிலளித்தார். அப்போது மீண்டும் எப்போது நிறுத்தப் போகிறீர்கள் என கேட்டபோது , “ஏன் உனக்கு நான் நிறுத்த வேண்டும் போல் இருக்கிறதா?” எனக் கேட்டார். அதற்கு மகன் “இல்லை” என பதிலளித்தார் உனக்கு நான் நடித்ததில் எந்த படம் மிகவும் பிடிக்கும் என கேட்டபோது மூக்குத்தி அம்மன் என பதிலளித்த மகன், “மூக்குத்தி அம்மன் முடித்தவுடன் நிறுத்தி விட வேண்டியதுதானே அதுதானே எனக்கு பிடிக்கும்” என தெரிவித்தார். அதற்கு RJபாலாஜி, “இதற்குப் பின்னர் உனக்கு பிடித்த மாதிரியான படங்களில் நடிக்கிறேன். உனக்கு வீட்ல விசேஷம் திரைப்படம் பிடித்தது தானே. பயங்கரமாக சிரித்தாய் அல்லவா.” எனக் கேட்க அதற்கு அவரது மகன் “ஆமாம்” ஆனால் மூக்குத்தி அம்மன், “இன்னும் நன்றாக இருந்தது” என தெரிவித்ததும் RJ.பாலாஜி “சரி இதற்கு மேல் உனக்கு பிடித்த மாதிரி படங்கள் பண்ணுகிறேன்” என பதிலளித்தார். இன்னும் பல கலகலப்பான கேள்விகளும் சுவாரஸ்யமான பதில்களும் நிறைந்த அந்த பேட்டியில் முழு வீடியோ இதோ…
 

நேருக்கு நேர் with
Mahanth s/o RJ Balaji 😀♥️#RunBabyRun from February 3rd !!! 🖤 pic.twitter.com/XpHcsV1kRY

— RJ Balaji (@RJ_Balaji) January 28, 2023

சமந்தா - வாரிசு தயாரிப்பாளர்  இணைந்த பிரம்மிப்பான படைப்பு… ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் ரொமான்டிக்கான GLIMPSE புதிய இதோ!
சினிமா

சமந்தா - வாரிசு தயாரிப்பாளர்  இணைந்த பிரம்மிப்பான படைப்பு… ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் ரொமான்டிக்கான GLIMPSE புதிய இதோ!

வேற லெவல் FUN உறுதி... குக் வித் கோமாளி சீசன் 4 செட்டில் புகழின் சேட்டை - கலக்கலான வீடியோ இதோ!
சினிமா

வேற லெவல் FUN உறுதி... குக் வித் கோமாளி சீசன் 4 செட்டில் புகழின் சேட்டை - கலக்கலான வீடியோ இதோ!

சிலம்பரசன்TR-ன் வெந்து தணிந்தது காடு பட ஸ்பெஷல் கிஃப்ட் ரெடி... ARரஹ்மானின் அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்!
சினிமா

சிலம்பரசன்TR-ன் வெந்து தணிந்தது காடு பட ஸ்பெஷல் கிஃப்ட் ரெடி... ARரஹ்மானின் அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்!