பிரபல Radio தொகுப்பாளராக இருந்து ,சினிமாவில் காமெடியனாக மாறி LKG படத்தின் மூலம் ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் RJ பாலாஜி.இவர் ஹீரோவாக நடித்த LKG திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

RJ Balaji Nayanthara Mookuthi Amman Shoot Wrapped

இதனை தொடர்ந்து RJ பாலாஜி ஹீரோவாக நடிக்கும் படத்தையும் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.இந்த படத்தின் மூலம் RJ பாலாஜி இயக்குனராக அறிமுகமாகிறார்.இந்த படத்திற்கு மூக்குத்தி அம்மன் என்று பெயரிட்டுள்ளது.நயன்தாரா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

RJ Balaji Nayanthara Mookuthi Amman Shoot Wrapped

இந்த படத்தின் நீண்ட முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது என்று RJ பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.