மூக்குத்தி அம்மன் கிளைமாக்ஸ் காட்சி உருவான விதம் !
By Sakthi Priyan | Galatta | November 03, 2020 15:40 PM IST

LKG படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கி, நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன். இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, மௌலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். RJ பாலாஜியுடன் இணைந்து NJ சரவணனும் இந்த படத்தை இயக்கியுள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிஷ் கோபால கிருஷ்ணன் இசையமைத்துள்ளார். செல்வா RK படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.
வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் முற்றிலுமாக முடிவடைந்து ரிலீசுக்குத் தயாராகிவந்த நிலையில், வரும் தீபாவளி அன்று இத்திரைப்படம் நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. கொரோனா காரணமாக, இந்தியாவில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் ஓடிடி தளங்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. நிகழ்ச்சி தொகுப்பாளராக வரும் RJ பாலாஜி, மூக்குத்தி அம்மனை சந்தித்தவுடன் அவர் வாழ்வில் நடக்கும் மாற்றங்களே படத்தின் கதைக்கருவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காமெடி படமாக இருந்தாலும், நிகழ்கால சமூக பிரச்சனைகளை பேசும் படமாக இருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் திரை ரசிகர்கள். மதத்தை வைத்து நடக்கும் வியாபார விஷயங்கள் குறித்தும் இந்த படம் பேசியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று படத்தின் முதல் சிங்கிள் ஆடி குத்து பாடல் வீடியோ தற்போது வெளியானது. பிரபல பின்னணி பாடகி L.R.ஈஸ்வரி அந்த பாடலை பாடியிருந்தார்.
மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி உருவான விதம் பற்றி தெரியவந்தது. இந்த கிளைமாக்ஸ் காட்சி 7500 துணை நடிகர்கள் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. இக்காட்சியை படமாக்குவது இயக்குனர்கள் குழு RJ பாலாஜி, NJ சரவணன் ஆகியோருக்கும் மற்றும் மொத்த படக்குழுவினருக்கும் கடுமையான சவாலாக இருந்தது. மிகக்குறுகிய காலத்தில் கடும் உழைப்பில் மிகப்பெரும் ஜனத்திரள் கொண்டு இக்காட்சியை படமாக்கியுள்ளனர் படக்குழுவினர்.
யாருமே எதிர்பாராவகையில் பெரும் ஜனத்திரள் கொண்ட இக்காட்சியை படக்குழு ஒரே நாளில் படமாக்கியுள்ளது. பொது முடக்கம் தற்போதும் நடைமுறையில் உள்ள நிலையில், இவ்வளவு பெரிய கூட்டத்தை வைத்து படப்பிடிப்பு நடத்துவதென்பது எந்த ஒரு திரைப்படகுழுவும் நினைத்தே பார்த்திராத பணியாகும். நல்லவேளையாக படத்தின் இப்பகுதியை இந்த பொது முடக்க காலத்திற்கும் முன்னதாகவே படமாக்கியதில் படக்குழு மகிழ்ச்சியாக உள்ளது.
Bigg Boss 4 Tamil New Promo - Suresh asks Archana to shut up!
03/11/2020 03:07 PM
SPB Charan breaks down emotionally - SPB Tribute Program | Emotional Promo
03/11/2020 01:19 PM
Bigg Boss 4 Tamil Latest Promo - Suresh files complaint against Sanam Shetty!
03/11/2020 12:04 PM