பிரபல Radio தொகுப்பாளராக இருந்து ,சினிமாவில் காமெடியனாக மாறி LKG படத்தின் மூலம் ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் RJ பாலாஜி.இவர் ஹீரோவாக நடித்த LKG திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

RJ Balaji Announcement on Nov 10 Match Tweet

LKG படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது.இதனை தொடர்ந்து RJ பாலாஜி ஹீரோவாக நடிக்கும் படத்தையும் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது என்ற தகவல் கிடைத்திருந்தது.இந்த படத்தின் மூலம் RJ பாலாஜி இயக்குனராக அறிமுகமாகிறார்.

RJ Balaji Announcement on Nov 10 Match Tweet

இதனை தவிர அவ்வப்போது கிரிக்கெட் கமெண்ட்ரியிலும் வந்துசெல்வார்.பட வேளைகளில் பிஸியாக இருந்ததால் கமெண்டரிக்கு இடைவேளை விட்டிருந்தார்.மீண்டும் எப்போது வருவீர்கள் என்ற ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த பாலாஜி ஞாயிறு அன்று நடக்கும் போட்டிக்கு வருவதாகவும் அன்று முக்கியமான அப்டேட்டுடன் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது இவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்ற தகவலை நாம் முன்னரே தெரிவித்திருந்தோம் இந்த அறிவிப்பாகவும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nayanthara RJ Balaji