விறுவிறுப்பான திரில்லர் களத்தில் ஆர்.ஜே.பாலாஜி - மக்கள் மத்தியில் கவனம் பெரும் ரன் பேபி ரன் படத்தின் டிரைலர் இதோ..

வெளியானது ஆர் ஜே பாலாஜியின் ரன் பேபி ரன் திரைப்பட டிரைலர் - RJ balaji next film run baby run movie trailer launched | Galatta

தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலங்களில் ஒருவர் ஆர்.ஜே.பாலாஜி.ரேடியோவில் ஆர்ஜேவாக, கிரிக்கெட் போட்டிகளில் கமென்ட்டராக பல படங்களில் நகைச்சுவை நடிகராக, கதாநாயகனாக மற்றும் இயக்குனராக என்று பல பரிமாணங்களில் மக்களை குதூகலப்படுத்தி வருபவர். திரையில் மட்டுமல்லாமல் சமூக கருத்துக்களை அவ்வப்போது பேசி கவனம் பெற்றவர் ஆர்.ஜே. பாலாஜி. காமெடியனாக அறிமுகமானாலும் கதாநாயகனாக அவரது அறிமுகம் மக்களை வெகுவாக கவர்ந்தது. ‘எல்.கே.ஜி’ முதல் ‘வீட்ல விசேஷம்' வரை இவரது படங்களுக்கு ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்து இருக்கிறார்.  தற்போது ஆர்ஜே பாலஜி 'சிங்கபூர் சலூன்' என்ற படத்தையும் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆர்.ஜே பாலாஜி நடித்து ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கிய ‘ரன் பேபி ரன்’ திரைப்படத்தில் வழக்கமான நகைச்சுவை பாணியில் இருந்து விலகி முதன்முதலில் திரில்லர் கதையில் நடித்துள்ளார். இப்படத்தில் ஆர்.ஜே பாலாஜியுடன் இணைந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் படத்தில் ராதிகா சரத்குமார், இஷா தல்வார், ஸ்மிருதி வெங்கட், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.சாம் சி எஸ் இசையில் முன்பு வெளிவந்த பிரத்யேக பின்னணி இசை வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ரன் பேபி ரன் படத்தின் டிரைலரை நடிகர் கார்த்தி வெளியிட்டுவுள்ளார்.

Very eager to see @RJ_Balaji in a new shade. Wishing all success to #RunBabyRun team.

Trailer - https://t.co/MGYxgrpDFL@aishu_dil @jiyenkrishna @Prince_Pictures @SamCSmusic

— Karthi (@Karthi_Offl) January 19, 2023

விறுவிறுப்பான கிரைம் திரில்லர் கதைக்ளத்தில் சாம் சி.எஸ் ன் பின்னணி இசையில் வழக்கமான நகைச்சுவையை தாண்டி ஆர்.ஜே பாலாஜி சீரியசாக நடித்துள்ளது டிரைலர் மூலம் மக்களிடம்  டிரைலர் கவனம் பெறுகிறது. நிச்சயம் திரைப்படம் ஆர்.ஜே பாலாஜி திரைபயனத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 3 ம் தேதி திரைக்கு வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  ரன் பேபி ரன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை ஆர்.ஜே பாலாஜிக்கு கொடுத்துவிட்டால் எல் கே ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் படத்தை தொடர்ந்து மேலும் ஒரு வெற்றியை பதிவு செய்வார் ஆர்.ஜே பாலாஜி.

 விஜய் ஆண்டனிக்கு என்ன ஆனது?.. இப்போ அவர் உடல்நிலை எப்படி இருக்கு?.. – தயாரிப்பாளர் தனஞ்செயன் பகிர்ந்த தகவல் இதோ..
சினிமா

விஜய் ஆண்டனிக்கு என்ன ஆனது?.. இப்போ அவர் உடல்நிலை எப்படி இருக்கு?.. – தயாரிப்பாளர் தனஞ்செயன் பகிர்ந்த தகவல் இதோ..

யார் Real winner வாரிசு?.. துணிவு?.. – உண்மையை உடைத்த தயாரிப்பாளர் தனஞ்செயன்.. சுவாரஸ்யமான தகவல் இதோ..
சினிமா

யார் Real winner வாரிசு?.. துணிவு?.. – உண்மையை உடைத்த தயாரிப்பாளர் தனஞ்செயன்.. சுவாரஸ்யமான தகவல் இதோ..

லோகேஷ் கனகராஜ் இணை இயக்குனரின் புதிய படம் அறிவிப்பு.. – விஜய் ரசிகர்களால் வைரலாகும் பதிவு..
சினிமா

லோகேஷ் கனகராஜ் இணை இயக்குனரின் புதிய படம் அறிவிப்பு.. – விஜய் ரசிகர்களால் வைரலாகும் பதிவு..