பிரபலமான ரேடியோ வர்ணனையாளராக தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்த பாலாஜி தொடர்ந்து நடிகராகவும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக பாலாஜி இயக்கி நடித்து வெளிவந்த வீட்ல விசேஷங்க திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக இவரது நடிப்பில் சிங்கப்பூர் சலூன் திரைப்படம் வெளிவர தயாராகி வருகிறது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா மற்றும் ஜூங்கா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கத்தில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி.K.கணேஷ் அவர்கள் தயாரித்துள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து RJபாலாஜி புதிய படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.பிரபல மலையாள இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை கார்த்தியின் சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

யுவா ஒளிப்பதிவு செய்யும் திரைப்படத்திற்கு மதன் கணேஷ் படத்தொகுப்பு செய்கிறார். கடந்த மார்ச் மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது “அனைவரும் ஓடுவதற்கு தயாரா?” என குறிப்பிட்டு படத்தில் இருந்து புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். RJ.பாலாஜியின் அசத்தலான அந்த போஸ்டர் இதோ…
 

Are you ready to run ? 😉@RJ_Balaji @Prince_Pictures #ComingSoon pic.twitter.com/1hxPB481C7

— Prince Pictures (@Prince_Pictures) December 2, 2022