பிரபல Radio தொகுப்பாளராக இருந்து ,சினிமாவில் காமெடியனாக மாறி LKG படத்தின் மூலம் ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் RJ பாலாஜி.இவர் ஹீரோவாக நடித்த LKG திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

RJ Balaji About Mookuthi Amman Release Nayanthara

இதனை தொடர்ந்து RJ பாலாஜி ஹீரோவாக நடிக்கும் படத்தையும் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.இந்த படத்தின் மூலம் RJ பாலாஜி இயக்குனராக அறிமுகமாகிறார்.இந்த படத்திற்கு மூக்குத்தி அம்மன் என்று பெயரிட்டுள்ளது.நயன்தாரா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

RJ Balaji About Mookuthi Amman Release Nayanthara

இந்த படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.நேற்று இன்ஸ்டாகிராமில் லைவாக வந்த RJ பாலாஜி கொரோனா இல்லாமால் இருந்திருந்தால் மே 1 அன்று இந்த படம் வெளியாகியிருக்கும்.படக்குழுவினர் அனைவரும் இரவு பகல் பாராது மே 1ஆம் தேதி ரிலீஸ் செய்யவேண்டும் என்று உழைத்தோம்.தற்போதுள்ள சூழ்நிலையில் நாம் அனைவரும் பத்திரமாக இருந்து பின்னர் நிலைமை சரியான பிறகு இந்த படத்தின் ரிலீஸை பார்க்கலாம்.

RJ Balaji About Mookuthi Amman Release Nayanthara