தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான நடிகர் ரியாஸ்கான் பத்ரி, ஆளவந்தான், பாபா, வின்னர் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலம் அடைந்தார். மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் ரியாஸ் கானின் மனைவியான நடிகை உமா ரியாஸ் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த அன்பே சிவம் திரைப்படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் தொடர்ந்து இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் வெளிவந்த மௌனகுரு படத்தில் நடிகை உமா ரியாஸின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. 

மேலும் நடிகை உமா ரியாஸ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி இரண்டாவது பரிசை வென்றார். நடிகர் ரியாஸ் கான் இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் தம்பதியினரின் 29வது திருமண நாளை சமீபத்தில் கொண்டாடினர். தங்களது திருமண நாளில் ரசிகர்களோடு லைவ்வில் கலந்துரையாடிய உமா ரியாஸ் மற்றும் ரியாஸ்கான் தம்பதியின் ஸ்பெஷல் வெட்டிங் ஆனிவர்சரி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 

அழகான திருமண வாழ்வில்  29ஆவது திருமண நாளை கொண்டாடும் தம்பதியினருக்கு திரையுலகை சார்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் தெரிவித்த வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்து பேசும் வீடியோவில் நடிகர் ரியாஸ்கான் ரசிகர்கள் முன்னிலையில் நடிகை உமா ரியாஸுக்கு தாலி கட்டி அவர்களுடைய திருமண நிகழ்வை மீண்டும் நிகழ்த்தி காட்டியுள்ளார். மேலும் பொன்னியின் செல்வன், தல அஜித்தின் வலிமை திரைப்படங்கள் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களையும் இதில் பகிர்ந்து கொண்டார். யூட்யூபில் ட்ரெண்டாகும் அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.