இறுதி சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். முதல் படத்திலே அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினார். இதனை தொடர்ந்து, விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை மற்றும் ராகவா லாரன்ஸுடன் சிவலிங்கா போன்ற படங்களில் நடித்தார். 

Ritika Singh Washing Clothes In Lockdown

சமீபத்தில் இவரது நடிப்பில் ஓ மை கடவுளே திரைப்படம் வெளியானது. அசோக் செல்வன் மற்றும் வாணி போஜன் இந்த படத்தில் நடித்தனர். அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கினார். ஊரடங்கு நேரத்தில் திரைப்பிரபலங்கள் படப்பிடிப்பிற்கு செல்ல இயலாமல் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ளனர். சமையல், உடற்பயிற்சி, நடனம் போன்ற வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். 

Ritika Singh Washing Clothes In Lockdown

இந்நிலையில் ரித்திகா வீட்டில் பாடல் பாடிக்கொண்டே துணி துவைக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தை அசத்தி வருகிறது. ரித்திகா அடுத்ததாக பாக்ஸர் படத்தில் நடிக்கவுள்ளார். அருண் விஜய் நடிக்கும் இந்த படத்தை விவேக் இயக்கவுள்ளார்.