குத்துசண்டை வீராங்கனையாக இருந்து நடிகையாகி தற்போது ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறி இருப்பவர் ரித்திகா சிங்.தனது முதல் படமான இறுதி சுற்று படத்தில் இவர் ஒரு பாக்ஸர் ஆகவே நடித்திருந்தார்.சுதா கொங்கரா இயக்கத்தில் , மாதவன் நடிப்பில் தமிழ் மற்றும் ஹிந்தியில் இந்த படம் உருவானது.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்த படம் இவருக்கு பெரிய அடையாளத்தையும் பெரிய வெற்றியையும் பெற்று தந்தது.இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் கனவுக்கன்னியாக அவதரித்தார்.இதனை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ஆண்டவன் கட்டளை படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற,ராசியான நடிகையாக மாறினார் ரித்திகா.தொடர்ந்து இவர் லாரன்ஸ் உடன் நடித்த சிவலிங்கா படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தெலுங்கு இறுதிச்சுற்று படத்தில் நடித்து தெலுங்கிலும் தனது முத்திரையை பதித்தார் ரித்திகா.இதனை தொடர்ந்து அசோக் செல்வன் ஹீரோவாக நடித்து சமீபத்தில் செம ஹிட் அடித்த ஓ மை கடவுளே படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.அஸ்வந்த் மாரிமுத்து இந்த படத்தை இயக்கியிருந்தார்.

அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர்,அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.கொரோனா காரணமாக பிரபலங்கள் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.ரித்திகாவும் தனது ஒர்க்கவுட் வீடியோக்கள் சிலவற்றை ரசிகர்களுடன் அவ்வப்போது பகிர்ந்து வந்தார்.

கடந்த மாதம் கூட இவரது ஒர்க்கவுட் வீடியோ ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது ஒர்க்கவுட் முடித்து விட்டு நடனமாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரித்திகா.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

When you smash your last workout session of the week 😂💪🏼 #postworkout #donefortheweek #pumpedaf #happyweekend

A post shared by Ritika Singh (@ritika_offl) on