தமிழ் திரையுலகில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை ஜெனிலியா. தமிழ் மொழி அல்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என கொடி கட்டி பறந்த நடிகைகளில் இவரும் ஒருவர். 2007-ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த ஹாசினி பாத்திரம் இன்றளவும் பேசப்படும் ரோலாக அமைந்துள்ளது. 

ritesh

பிரபல பாலிவுட் நடிகரான ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துள்ளார் ஜெனிலியா. விஜய்யுடன் சேர்ந்து சச்சின் திரைப்படத்தில் நடித்த ஜெனிலியா அதன் பிறகு தனுஷுடன் உத்தமபுத்திரன் படத்தில் நடித்திருந்தார். இறுதியாக வேலாயுதம் படத்தில் நடித்தார். அதன் பிறகு ஹிந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

genelia

தற்போது இவரது கணவர் ரிதேஷ், கிறிஸ்துமஸ் தினத்தன்று டை கட்டி விடுவது போன்ற வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

It’s never too late to tie a knot❤️ #alliwantforchristmasisyou

A post shared by Genelia Deshmukh (@geneliad) on