திரௌபதி படத்தின் ட்ரைலர் வெளியானது !
By Sakthi Priyan | Galatta | January 03, 2020 18:40 PM IST

கடந்த 2002-ம் ஆண்டு காதல் வைரஸ் எனும் படத்தில் அறிமுகமானவர் நடிகர் ரிச்சர்ட். நடிகை ஷாலினியின் தம்பியான ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள படம் திரௌபதி. பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் இயக்குநர் ஜி.மோகன் இந்த படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.
இப்படம் உண்மை சம்பவத்தை கதைகளமாக கொண்டுள்ள திரைப்படமாகவும் அமைந்துள்ளது.
தேசிய விருது பெற்ற டூ லெட் திரைப்படத்தின் கதாநாயகி ஷீலா ராஜ்குமார் நாயகியாக நடித்துள்ளார். நடிகர் கருணாஸ் இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜூபின் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது.