மெட்டி ஒலி இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியில் வெற்றிநடை போட்ட தொடர் நாதஸ்வரம்.இந்த தொடரில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சங்கவி.இதனை அடுத்து மீண்டும் திருமுருகன் இயக்கிய குலதெய்வம் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் சங்கவி.

இதனை அடுத்து ஜீ தமிழின் ஆத்மா தொடரில் நடித்தார்,அடுத்தாக திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் தொடரான கல்யாண வீடு தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார் சங்கவி.

ஜீ தமிழில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் ரெட்டை ரோஜா தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தினார் சங்கவி.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

இவருக்கு 2021 செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்று முடிந்தது.தற்போது இவர் கர்பமாக இருப்பதாக சில புகைப்படங்களுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சங்கவி.இவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.