தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானவர் ரேஷ்மா பசுப்புலெட்டி. அதனைத்தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு எழில் இயக்கத்தில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா எனும் பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார். இதையடுத்து பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு உலகளவில் பிரபலமானார். 

Reshma Pasupuleti Shares Video With Her Son

ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். மே 17-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கின்றனர். 

Reshma Pasupuleti Shares Video With Her Son

இந்நிலையில் ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனுடன் உள்ள வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவரது மகன் காபி போட்டு எடுத்து வந்து கொடுக்கும் வீடியோவை விஸ்வாசம் கண்ணான கண்ணே பாடலுடன் இணைத்து வெளியிட்டுள்ளார். மேலும், இது எனது மகன் ராகுல். கடந்த இரண்டு தினங்கள் எனக்கு ரொம்பவே கடினமான ஒன்றாக இருந்தது. அதனால் என்னை ஆச்சர்யப்படுத்தி, மீண்டும் சிரிக்க வைக்க அவன் இப்படி செய்திருக்கிறான் என மகனின் பாச செயல் குறித்து பதிவு செய்துள்ளார்.