ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பூவே பூச்சூடவா.டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதில் வெற்றி பெற்று பூவே பூச்சூடவா தொடரின் ஹீரோயினாக உருவெடுத்வர் ரேஷ்மா.சீரியலிலும் தனது நடிப்பால் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார்.

இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் மதன் பாண்டியனை காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தொடரின் நாயகி ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புத்தாண்டு அன்று தெரிவித்திருந்தார்.இந்த தொடர் 1000 எபிசோடுகளை கடந்து பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

பூவே பூச்சூடவா தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில்.கலர்ஸ் தமிழில் புதிதாக ஒளிபரப்பை தொடங்கிய அபி டெய்லர் தொடரில் ரேஷ்மா ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த தொடரில் நாயகனாக ரேஷ்மாவை திருமணம் செய்துகொள்ள இருக்கும் மதன் நடிக்கிறார்.

இந்த தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து வந்த ரேஷ்மாவிடம் ரசிகர் ஒருவர் எப்போது திருமணம் என்று கேட்டார்,அதற்கு பதிலளித்த ரேஷ்மா வெகுவிரைவில் அந்த நாள் வருகிறது என்று ஜோடியாக இருக்கும் ஒரு புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.

reshma muralidharan answers about her marriage with madhan pandian