மலையாள திரையுலகின் பன்முகத்திறன் கொண்டவர் நடிகர் ரெஞ்சி பனிக்கர். நடிகர், இயக்குனர், கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பல அவதாரங்கள் எடுத்துள்ளார். பிரேமம் படத்தில் நிவின் பாலியின் தந்தையாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். தற்போது இவர் நடிப்பில் கோளாம்பி, காவல் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. 

Renji Panicker Son Nikhil Gets Married To Megha Sreekumar

இந்நிலையில் ரெஞ்சி பனிக்கரின் மகன் நிகில், மேகா ஸ்ரீ குமார் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கேரளாவிலுள்ள ஆரன்முளா கோவிலில் நடைபெற்றது. இந்த விழாவில் குடும்பத்தினர் மட்டும் பங்குகொண்டனர். இவரும் இயக்குனர் நித்தின் ரெஞ்சி பணிக்கர் இருவரும் இரட்டையர்கள். விரைவில் வெளியாகவுள்ள பயோபிக் திரைப்படத்தில் நிகில் நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Renji Panicker Son Nikhil Gets Married To Megha Sreekumar Renji Panicker Son Nikhil Gets Married To Megha Sreekumar

லாக்டவுனில் திரைப்பிரபலங்களும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை எளிமையாக நடத்தி வருகின்றனர். நிகில் மற்றும் மேகா ஸ்ரீ குமார் தம்பதியை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.