தமிழ்,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் ரெஜினா.கடைசியாக தமிழில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார்.பார்ட்டி,நெஞ்சம் மறப்பதில்லை படங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Regina Next Tamil Film With Caarthick Raju

அருண் விஜய் நடிக்கும் AV 31,விஷால் நடிக்கும் சக்ரா,கசடதபற உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.அடுத்ததாக தமிழ் தெலுங்கு மொழிகளில் தயாராகும் படமொன்றில் ரெஜினா நடிக்கிறார்.

Regina Next Tamil Film With Caarthick Raju

திருடன் போலீஸ்,உள்குத்து,கண்ணாடி உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்தை ராஜ் சேகர் வர்மா இயக்குகிறார்.இந்த அறிவிப்பை படத்தின் இயக்குனர் கார்த்திக் ராஜு வெளியிட்டுள்ளார்.