தமிழ்,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் ரெஜினா.கடைசியாக தமிழில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார்.பார்ட்டி,நெஞ்சம் மறப்பதில்லை படங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Regina Cassandra Soorpanagai FirstLook Released

அருண் விஜய் நடிக்கும் AV 31,விஷால் நடிக்கும் சக்ரா,கசடதபற உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் அடுத்த படத்தை திருடன் போலீஸ்,உள்குத்து,கண்ணாடி உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்குகிறார்.

Regina Cassandra Soorpanagai FirstLook Released

சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.இந்த படத்திற்கு சூர்ப்பனகை என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.விஜய்சேதுபதி வெளியிட்டுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.