மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் திரையுலகை தாண்டி தற்போது இந்திய அளவில் பல மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்திருக்கும் விஜய் சேதுபதி உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தொடர்ந்து மாநகரம் படத்தின் பாலிவுட் ரீமேக்காக தயாராகியுள்ள மும்பைக்கார் திரைப்படத்திலும் , நடிகை அதிதி ராவ் ஹைடாரியுடன் இணைந்து காந்தி டாக்ஸ் எனும் மௌனத் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் பிரபலமான ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்களின் அடுத்த வெப்சீரிஸில் நடிக்கிறார் விஜய் சேதுபதி.

இந்தியாவில் மிகவும் பிரபலமான ஃபேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் அடுத்ததாக தயாராகி வரும் புதிய வெப்சீரிஸில் நடிகர் ஷாஹித் கபூர், கேகே மேனன், அமோல் பலேகர், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த புதிய வெப்சீரிஸில்  மற்றொரு பிரபல தமிழ் நடிகையான நடிகை ரெஜினா கெஸன்ட்ரா இணைந்துள்ளார்.  விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த வெப்சீரிஸ்-ன் படப்பிடிப்பில் நடிகை ரெஜினா கெஸன்ட்ரா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. விரைவில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.