தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக திகழ்ந்து வருவது விஜய் டிவி.20 வருடங்களுக்கும் மேலாக தங்களின் வித்தியாசமான தொடர்கள் மூலமாகவும்,விறுவிறுப்பான தொடர்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து விட்டனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர்களுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.இந்த தொடர்களில் நடித்து பலரும் தங்களுக்கென ரசிகர் பட்டாளங்கள் உருவாகும் அப்படி பலரும் நட்சத்திரங்களாக அவதரித்துள்ளனர்.

விஜய் டிவி சீரியல் குடும்பத்தில் புதிதாக இணைந்துள்ள ஒரு சீரியல் சிப்பிக்குள் முத்து.திருமதி ஹிட்லர் தொடரில் நடித்த பவ்யா ஸ்ரீ மற்றும் சூப்பர் குயின் தொடரில் பங்கேற்ற லாவண்யா இருவரும் கதையின் நாயகிகளாக நடிக்கின்றனர்.இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரில் பல நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடரில் வில்லி வேடத்தில் நடித்து வந்த நடிகை நிலானி சில காரணங்களால் விலக அவருக்கு பதிலாக ரிஹானா இணைந்துள்ளார்.இவரது எபிசோடுகள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.

 

View this post on Instagram

A post shared by Nilani (@actress_nilanii_offcial)