நிவின் பாலி நடித்த ஜகோபிண்டே ஸ்வர்கராஜ்யம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ரெபா மோனிகா ஜான். தமிழில் ஜருகண்டி என்ற படத்தில் ஜெய் ஜோடியாக நடித்திருந்தார். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானார். அதன் பிறகு தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்தார். 

Reba Monica John Tiktoks Romantic Dialogue

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நேரத்தில் மக்கள் தங்கள் பணிக்கு திரும்பாமல் அவதி படுகின்றனர். திரைப்பிரபலங்களும் தங்கள் படப்பிடிப்பிற்கு செல்ல இயலாமல் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ளனர். ரசிகர்களுடன் லைவ்வில் தோன்றியும், அவர்கள் பணிபுரிந்த படங்களின் அனுபவம் குறித்தும் பதிவு செய்து வருகின்றனர். 

Reba Monica John Tiktoks Romantic Dialogue

இந்நிலையில் ரெபா டிக்டாக் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. க்யூட்டான காதல் வசனத்தை பேசி டிக்டாக் செய்துள்ளார். ரெபா கைவசம் FIR, மழையில் நனைகிறேன் போன்ற படங்கள் உள்ளது.