தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Reba Monica John on Thalapathy Vijay Master Delay

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

Reba Monica John on Thalapathy Vijay Master Delay

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.இதுகுறித்து பிகில் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்த ரேபா மோனிகா கலாட்டாவுடனான சிறப்பு இன்ஸ்டாகிராம் லைவ்வில் பகிர்ந்துகொண்டார்.மாஸ்டர் தள்ளிப்போனது தனக்கும் வருத்தமளிப்பதாகவும்,பிகில் படத்தை அடுத்து அவரை திரையில் பார்க்க நானும் ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.இருந்தாலும் தற்போது உள்ள நிலையில் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும் பின்னர் மாஸ்டர் வரும் வேளையில் அதனை கொண்டாடலாம் என்றும் அவர் தெரிவித்தார்.