தமிழகத்தில் 2021ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறுகிறது.மக்கள் தங்கள் ஓட்டுக்களை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.பலரும் தங்கள் வாக்குகளை விறுவிறுப்பாக செலுத்தி வருகின்றனர்.

மக்களுடன் இணைந்து அரசியல் பிரமுகர்கள்,சினிமா நட்சத்திரங்கள் என்று பலரும் தங்கள் வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர்.தற்போது நிலவி வரும் கொரோனா சூழல் காரணமாக வாக்காளர்கள் மாஸ்க் போன்ற பாதுகாப்பு உபகாரணங்களோடு வந்து வாக்களித்து வருகின்றனர்.

தளபதி விஜய் காலை சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தி விட்டு சென்றார்.இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றன.மேலும் விஜய் பெட்ரோல் டீசல் விலைஉயர்வை கண்டிக்கும் விதமாக தான் சைக்கிளில் வந்துள்ளார் என்று விவாதங்களும் சமூகவலைத்தளங்களில் தொடங்கின.

தற்போது விஜய் எதற்காக சைக்கிளில் வந்தார் என்பது குறித்து அவரது செய்தி தொடர்பாளர் ஒரு விளக்கத்தை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது,வாக்குச்சாவடி விஜய் வீட்டிற்கு அருகில் உள்ளதால் மற்றும் கார் அங்குள்ள சாலையில் செல்ல முடியாது என்பதால் நடிகர் விஜய் சைக்கிளில் வந்தார்... வேறு எந்த காரணமும் இல்லை.. என்று அவர் தெரிவித்துள்ளார்