மாநகரம் புகழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் நேற்று வெளியாகி அசத்தியுள்ள படம் கைதி. இப்படம் முழுவதுமே இரவு நேரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படம் அமோக வரவேற்பை பெற்றது.

kaithi

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் இதனை எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தயாரித்துள்ளனர். இதில் கார்த்தியுடன் இணைந்து நரேன், ஜார்ஜ் மரியன், ரமணா, தீனா, தலைவாசல் விஜய், பொன்வண்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம்.சி.எஸ். பின்னணி இசை அமைத்துள்ளார்.

ravikchandran ravikchandran

தற்போது இப்படத்தை பார்த்து விட்டு, பிரபல ஒளிப்பதிவாளரான ரவி.கே.சந்திரன், படம் பற்றி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். நடிகர் கார்த்தியின் நடிப்பு பிரமாதமாக இருந்ததாகவும், படத்தின் சினிமாடோகிராபி சீராக இருந்ததாகவும் குறிப்பிட்டுளார். மேலும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தையும் பாராட்டியுள்ளார்.