புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி அவர்களின் அற்புதப் படைப்புகளில் ஒன்றான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகியிருக்கிறது.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தயாரித்துள்ளன. சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ரஹ்மான், விக்ரம் பிரபு, பிரபு ஆகியோர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளனர். 

மேலும் அஸ்வின் காக்குமனு, நிழல்கள் ரவி, கிஷோர், ரியாஸ் கான், லால், நாசர், மோகன் ராமன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தோட்டாதரணி கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்யும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். சோசியல் மீடியாவில் வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…
 

pic.twitter.com/edhAxtvJ0X

— Ravi varman (@dop_ravivarman) August 13, 2022