கடந்த 1991-ம் ஆண்டு திரையுலகில் கால் பதித்தவர் நடிகை ரவீனா டான்டன். தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தவர் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான ஆளவந்தான் படத்தில் நடித்தது மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். கடைசியாக யஷ் நடிப்பில் வெளியான KGF படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் ரவீனா. இதனையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் ரவீனா நடிக்கவுள்ளார். 

RaveenaTandon

இந்நிலையில் நடிகை ரவீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சிறுவயது பெண்ணாக உருமாறுவது போல் உருவாக்கப்பட்டுள்ளது. 15 வயது பெண்ணாக அவரது மகள் ரஷா காட்சியளிக்கிறார். அப்பதிவில், மீண்டும் 15 வயதிற்கு செல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தை அசத்தி வருகிறது. 

RaveenaTandon

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நேரத்தில் மக்கள் தங்கள் பணிக்கு திரும்பாமல் அவதி படுகின்றனர். திரைப்பிரபலங்களும் தங்கள் படப்பிடிப்பிற்கு செல்ல இயலாமல் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ளனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#freakymonday going back to being 15! #goingbackintime !

A post shared by Raveena Tandon (@officialraveenatandon) on