கடந்த 2017-ம் ஆண்டு மேயாத மான் எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ரத்னகுமார். வைபவ், பிரியாபவானி மற்றும் இந்துஜா நடிப்பில் வெளியான இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

Rathnakumar

அதன் பிறகு 2019-ம் ஆண்டு அமலா பால் வைத்து ஆடை எனும் படத்தை இயக்கினார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்துள்ளார். XB நிறுவனம் தயாரிப்பில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையைத்துள்ளார். 

Master

பத்து வருடம் முன்பு சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் போக்கிரி படத்தின் பாடலுக்கு அட்டகாசமான நடனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ரத்னா. அன்று விஜய் பாடலுக்கு ரசிகராய் ஆடியவரை, மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் தளபதி விஜய் ரத்னா என குறிப்பிட்டு பாராட்டியது அவரது திரை வளர்ச்சியை உணர்த்துகிறது. கடின உழைப்பிருந்தால் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு இயக்குனர் ரத்னகுமார் ஓர் சிறந்த உதாரணம்.