கடந்த 2017-ம் ஆண்டு மேயாத மான் எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ரத்னகுமார். அதன் பிறகு 2019-ம் ஆண்டு அமலா பால் வைத்து ஆடை எனும் படத்தை இயக்கினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கல் விருந்தாய் திரைக்கு வந்த மாஸ்டர் திரைப்படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்தார். 

மாஸ்டர் திரைப்பட அனுபவம் பற்றியும், தளபதி விஜய் பற்றியும் சூப்பரான ஒரு விஷயத்தை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் ஏற்கனவே பகிர்ந்திருந்தார் ரத்னா. அதில் 2019-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி என் வாழ்வில் மறக்க முடியாத நாள். என் பிறந்தநாளில் தளபதி விஜய் எனக்கு தொலைபேசி வாயிலாக அழைத்த நாள். 

தொலைபேசியில் லோகேஷ் கனகராஜ் குரலில் பேசி மிமிக்ரி செய்து எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினார் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தளபதி விஜய்க்கு கேக் ஊட்டிவிட்டுள்ளார். இதை விட சிறந்த தருணம் ஒரு ரசிகனுக்கு இருக்க முடியாது என்றே கூறலாம். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மாஸ்டர் திரைப்பட வெற்றிக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். ஜார்ஜியாவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது தளபதி 65 படக்குழு. இந்தப் படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை தளபதி 65 என அழைத்து வருகிறது படக்குழு.

முதல் அறிவிப்பே சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் கலாநிதி மாறனை சந்தித்த நடிகர் விஜய், இயக்குனர் நெல்சனை படத்தின் இயக்குனராக அறிமுகம் செய்து வைத்தார் விஜய். இதற்காக சன் பிக்சர்ஸ் சார்ப்பில் வெளியான புரோமோ வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

நீண்ட நாட்களாகவே இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் மார்ச் 31 சென்னையில் பூஜையுடன் துவங்கியது.