கீதா கோவிந்தம் என்ற படம் மூலம் மொத்த சவுத் இந்தியாவையும் தனது ரசிகர்களாக மாற்றியவர் ரஷ்மிக்கா மந்தனா.இந்த படத்தில் இவரது அழகிற்க்கும்,நடிப்பிற்கும் மயங்கிய ரசிகர்கள் இவரை கனவுக்கன்னியாக ஏற்றுக்கொண்டனர்.தமிழ்,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இவர் நடிக்கவில்லை என்றாலும் இவருக்கான வரவேற்பு அங்கும் அதிகமாகவே இருந்தது.

இதனை தொடர்ந்து இவர் மீண்டும் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து டியர் காம்ரேட் படத்தில் கிரிக்கெட் விளையாடும் பெண்ணாக நடித்திருந்தார்.இந்த படத்தில் நடித்தற்காக பல விருதுகளை அள்ளிக்குவித்தார் ராஷ்மிகா.துறுதுறுவென இந்த படத்தில் இருக்கும் இவரது கேரக்டர் பலராலும் ரசிக்கப்பட்டது.எமோஷனல் காட்சிகளிலும் அசத்தியிருப்பார் ராஷ்மிகா.

இந்த படத்தை பரத் கம்மா இயக்கியிருந்தார்.ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது இந்த படம்.இந்த படத்தில் ராஷ்மிகாவின் நடிப்பு பலராலும் பாராட்ட பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இவர் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.பொங்கலையொட்டி தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபுவுடன் இவர் நடித்த sarileru neekevaru படமும் நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து நிதின் நாயகனாக நடித்திருந்த பீஷ்மா படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் புஷ்பா படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லாக்டவுன் நேரத்தில் குடும்பத்தினருடன் இருப்பது மிகவும் பிடித்துள்ளது என்று தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்தார்,ராஷ்மிகா.அதோடு ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது என்று ரசிகர்களுடனும் கலந்துரையாடி வந்தார்.சமீபத்தில் இவர் ஹீரோயினாக நடித்துள்ள சுல்தான் படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது.தற்போது தனது புதிய ஒர்கவுட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ராஷ்மிகா , இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

View this post on Instagram

#noexcuses as I always say! 💯 You want it.. you go get it! 😎

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna) on