மக்களின் நம்பத்தக்க செய்தி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்பது நமது கலாட்டா நிறுவனம்.செய்திகள் மட்டுமின்றி பலருக்கும் அவர்களது திறமையை பாராட்டி அவ்வப்போது விருதுகளை வழங்கி அவர்களை கௌரவித்து வருகிறோம்.அந்த வகையில் இந்த வருடம் எந்த ஒரு இணையதளமும் நடத்தாத அளவு மிக பிரம்மாண்டமாக திரைத்துறையினரை கௌரவிக்கும் படி The Galatta Crown 2022 விருது விழா மே 8ஆம் தேதி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

திரைத்துறையில் சாதித்த பல அறிமுக கலைஞர்களுக்கும் பல முன்னணி நட்சத்திரங்களுக்கும் கௌரவித்து கலாட்டா பெருமை படுத்தியது.மேலும் சில அரசியல் சார்ந்த விருதுகள் மற்றும் திரைத்துறையினர் பங்கேற்ற உரையாடல் என பல அம்சங்கள் அடங்கிய மாபெரும் நிகழ்வாக இந்த விருது விழா நேற்று நடைபெற்றது.பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங் The Galatta Crown 2022வில் முக்கிய விருந்தினராக பங்கேற்றார்.

இவரை தவிர சிவகார்த்திகேயன்,நயன்தாரா,கீர்த்தி சுரேஷ்,க்ரிதி ஷெட்டி,பிரியங்கா மோகன்,கல்யாணி ப்ரியதர்ஷன்,அருண் விஜய்,யோகி பாபு,வெங்கட் பிரபு,விக்னேஷ் சிவன்,அனிருத்,ஜீ வி பிரகாஷ் என பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.மிக பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்த இந்த நிகழ்வின் வீடியோக்கள் ஒவ்வொன்றாக ரசிகர்களின் பார்வைக்கு வரவுள்ளது , அவற்றை நமது கலாட்டா யூடியூப் சேனலில் வெகு விரைவில் கண்டு மகிழலாம்.

இந்த பிரம்மாண்ட நிகழ்வின் வீடியோக்கள் ஒவ்வொன்றாக ரசிகர்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டு வருகிறது.இந்த நிகழ்வை பெரும் கொண்டாட்டமாக மாற்றிய நபர்களில் ஒருவர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்.என்ட்ரி முதல் தனது எனர்ஜியால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் ரன்வீர்.துள்ளலான நடனத்துடன் அரங்கம் அதிர என்ட்ரி கொடுத்தார் ரன்வீர்.

Game Changer Of Indian Cinema என்ற விருதினை இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.அப்போது பேசிய ரன்வீர் லோகேஷின் மாஸ்டர் படம் தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்தார்.வாத்தி கம்மிங் தனது Favourite எனவும் அவர் தெரிவித்தார்.தனக்கு நடிப்பது மக்களை என்டேர்டைன் செய்வது மிகவும் பிடிக்கும் உங்கள் அன்பு இருக்கும் வரை எனது மூச்சு இருக்கும்வரை தொடர்ந்து உங்களை மகிழ்விப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

அனிருத்துடன் சேர்ந்து ஊர்வசி பாடலை பாடி அசத்திய ரன்வீர்,ஒரு சூப்பர்ஸ்டார் வசனத்தை ரன்வீர் பேசி அசத்தினார்,அடுத்ததாக அனிருத்,கீர்த்தி சுரேஷ்,க்ரிதி ஷெட்டி உள்ளிட்டோருடன் இணைந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார்.இந்த முழு வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்