ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் க.பெ.ரணசிங்கம். விருமாண்டி இயக்கிய இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு. கொரோனா அச்சுறுத்தலால் அந்தப் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். 

Rangaraj Pandey In Ka Pae Ranasingam Movie

சமுத்திரக்கனி, ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை பார்த்துவிட்டு இசையமைப்பாளர் ஜிப்ரான் பாராட்டி பதிவு செய்துள்ளார். பின்னணி இசைக்கான பணிகளைத் தொடங்குகிறேன். அறம் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் இது. இதில் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். 

Rangaraj Pandey In Ka Pae Ranasingam Movie

தற்போது இந்த படத்தில் ரங்கராஜ் பாண்டேவும் உள்ளார் என்ற தகவல் தெரியவந்தது. நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு பாண்டே நடிக்கும் படம் இதுதான். இவரது நடிப்பை பாராட்டி கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் பதிவு செய்துள்ளது.