மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களான பிரித்திவிராஜ் மற்றும் பிஜூ மேனன் இணைந்து நடித்து, மறைந்த மலையாள இயக்குனர் சச்சி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து மெகா ஹிட்டான ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக தயாராகி வருகிறது பீம்லா நாயக் திரைப்படம்.

இயக்குனர் சாகர்.கே.சந்திரா இயக்கத்தில் உருவாகும் பீம்லா நாயக் படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, நடிகை நித்யா மேனன் & இயக்குனர் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் முன்னணி இயக்குனர் த்ரிவிக்ரம் சீனிவாஸ் வசனங்களை எழுத, தமன்.S இசையமைக்கிறார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, நவீன் நூலி படத்தொகுப்பு செய்துள்ளார்.முன்னதாக வெளியான பீம்லா நாயக் படத்தின் பாடல்கள் மற்றும் ப்ரோமோக்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த ஆண்டு பொங்கல்/சங்கராந்தி வெளியீடாக ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள பீம்லா நாயக் படத்தின் புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் தற்போது வெளியானது. பவர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் ராணா இணைந்திருக்கும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. ட்ரெண்டாகும் அந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்.