திரையுலகில் அனைவரும் விரும்பும் நடிகராக திகழ்பவர் நடிகர் ராணா டகுபதி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் தல அஜித்துடன் ஆரம்பம் படத்தில் நடித்திருந்தார். பாகுபலி படத்தில் இவரது நடிப்பை கண்ட ரசிகர்கள் கொண்டாட துவங்கினர். தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் காடன் திரைப்படத்தில் நடித்துள்ளார். 

Rana Daggubati To Wed Entrepreur Miheeka Bajaj

இந்நிலையில் ராணா டகுபதி தனது காதலியை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளார். பிரபல தொழிலதிபர் மிஹீகா பஜாஜ் என்பவர்தான் தனது காதலி என்று பதிவு செய்துள்ளார். அவர் தனது காதலுக்கு ஓகே சொல்லிவிட்டார் என்று குறிப்பிட்டு, இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். 

Rana Daggubati To Wed Entrepreur Miheeka Bajaj

இதைக்கண்ட ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் அனைவரும் ராணாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் இந்த அழகான ஜோடியின் திருமண செய்திகள் நம் செவிகளுக்கு எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.