கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். 

Ramya Subramanian Tiktok Kolamavu Kokila Scene

இந்நிலையில் VJ ரம்யா டிக்டாக் செய்து அசத்தியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் வெளியான படம் கோலமாவு கோகிலா. நயன்தாரா நடிப்பில் வெளியான இந்த படம் பட்டையை கிளப்பியது. யோகிபாபுவின் நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு வலு சேர்த்தது. படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை வசனத்தை டிக்டாக் செய்துள்ளார் ரம்யா. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Ramya Subramanian Tiktok Kolamavu Kokila Scene

XB பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் ரம்யா. உடற்பயிற்சி தவிர்த்து ஆடல் பாடல் என அசத்தி வரும் ரம்யாவை பாராட்டி வருகின்றனர் நெட்டிசன்கள். 

@actorramya

How much have I laughed watching this 😍😂🤩😅🤣! ##fangirl ##kolamaavukokila ##thaangithaangi

♬ Tanggi tanggi tanggi - bharathkumar09