தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த பிரபல காமெடியன் வடிவேல் பாலாஜி திடீரென உடல் நல குறைவால் சமீபத்தில் காலமானார். அவரது மரணம் சின்னத்திரை மற்றும் சினிமா துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாகவும், ஸ்ட்ரோக் காரணமாக அவரது இரண்டு கைகளும் செயலிழந்த நிலையில் தான் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்ததாக தகவல் வெளியானது. 

வடிவேலு போல நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்த பாலாஜியின் டைமிங் காமெடிக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். வடிவேலு போன்ற கெட்டப்பில் அவர் செய்யும் காமெடி மற்றும் ரியாக்‌ஷன்கள் நம்மை வயிறுக் குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது. டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி சில திரைப்படங்களிலும் வடிவேல் பாலாஜி நடித்துள்ளார். 

இந்நிலையில் தற்போது விஜே ரம்யா வடிவேல் பாலாஜி குறித்து எமோஷனலான வீடியோவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், வடிவேல் பாலாஜி அவர்களின், முதல் ஷோவில் நான் தான் தொகுப்பாளராக இருந்தேன். முதன்முதலில் அவரை பார்த்த போது, நிஜமாகவே வடிவேலு தான் வந்திருப்பதாக நினைத்தேன். பிறகு அருகில் சென்று பார்த்த போதுதான், அது அவரில்லை என தெரிந்தது. அபாரமான நகைச்சுவை உணர்வு கொண்டவர் வடிவேல் பாலாஜி என அவர் தெரிவித்தார். 

மேலும் வடிவேல் பாலாஜி இறந்து ஒரு வாரத்திற்கு பிறகு, அவரின் நினைவுகள் இன்று வந்ததாகவும், அதனால்தான் இந்த வீடியோவை வெளியிட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களால் மிகவும் விரும்பப்பட்ட தொகுப்பாளர்கள் பட்டியலில் ரம்யாவுக்கு முக்கிய இடம் உண்டு. டிடி-க்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் பெண் தொகுப்பாளர்களில் பெரிதும் விரும்பப்பட்டவர். சினிமாவில் இரண்டாம் கட்ட கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரம்யாவுக்கு அடுத்து ஒரு ஹீரோயின் சான்ஸ் கிடைத்தது. இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை, கேம் ஓவர் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. 

எப்போதும் போட்டோஷூட்கள், உடற்பயிற்சி வீடியோக்கள் என சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கிறார் ரம்யா. கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனில் தன்னை மெருகேற்றிக்கொள்ளும் பணிகளில் ரம்யா தீவிரமாக இறங்கியிருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார் ரம்யா.